­

Thursday, 3 October 2019

சிங்கத்தை சீண்டிப் பார்க்கும் பெண் வைரலாகும் வீடியோ


நியூயார்க் நகரில் உள்ள பிராங்ஸ் உயிரியல் பூங்காவில் பார்வையாளராக வந்த ஒரு இளம் பெண் பாதுகாப்பு வேலியை தாண்டி சிங்கம் இருந்த பகுதிக்கு சென்று, சிங்கத்தின் முன்பு சிங்கத்தை அழைப்பது போல் சைகை செய்து கைகளை விரித்து நடனமாடிய 13 வினாடி காட்சி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.



இது விதிமுறைகளை மீறிய ஒரு அபாயகரமான செயல் என்று உயிரியல் பூங்கா நிர்வாகிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். சிங்கத்தின் முன்பு நடனமாடிய அந்தப் பெண் நல்லவேளையாக சிங்கம் கோபமடைந்து பாய்வதற்கு முன்பு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார் அதனால் அபாயகரமான சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவத்தை படம் பிடித்த இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளிக் காட்சியாக பதிவிட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து நியூயார்க் நகர போலீசார் நடத்திய விசாரணையில் சிங்கத்தின் முன்பு நடனமாடிய பெண் 32 வயதான நியூயார்க் நகரை சேர்ந்த மியா ஆட்ரி, என்பது தெரியவந்துள்ளது. உயிரியல் பூங்கா விதிமுறைகளை மீறி சிங்கத்தின் முன்பு சென்று நடனமாடிய  இந்தப் பெண்ணின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள் 
-------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்