Friday 10 July 2020

தாயின் செயலிழந்த கருத்தடை சுருளை கையில் பிடித்து கொண்டே பிறந்த குழந்தை



வியட்நாம் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஹை பூங் சர்வதேச மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ குழுவுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

கருத்தடை சாதனம் செயலிழந்ததால் கருத்தரித்த அந்த பெண்ணுக்கு வெற்றிகரமான பிரசவத்தில்  பிறந்த ஆண் குழந்தை பிறக்கும் போதே பிரசவம் பார்த்த மருத்துவரையும், பணியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த குழந்தை தாயின் செயலிழந்த கருத்தடை சுருளை கையில் பிடித்து கொண்டே தடைகளை உடைத்து பிறந்துள்ளது தான் வியப்பின் உச்சம். அந்த குழந்தையை பெற்ற தாயின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பார்த்த மருத்துவர் ட்ரான் வியட் பூங் அந்த குழந்தையை புகைப்படமெடுத்து இணையத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

"பிரசவம் முடிந்த பின்பு, அந்த குழந்தை கருத்தடை சாதன சுருளை கைகளில் இறுக்கமாக பற்றி கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது, அதனால் அதை புகைப்படம் எடுத்து வைத்து கொண்டேன். அந்த புகைப்படம் இணையத்தில் இவ்வளவு கவனத்தை பெற்று பிரபலமாகும் என்று நான் ஒருபோதும்  நினைக்கவில்லை" என்று அந்த மருத்துவர் கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள் 
-------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 3 October 2019

சிங்கத்தை சீண்டிப் பார்க்கும் பெண் வைரலாகும் வீடியோ


நியூயார்க் நகரில் உள்ள பிராங்ஸ் உயிரியல் பூங்காவில் பார்வையாளராக வந்த ஒரு இளம் பெண் பாதுகாப்பு வேலியை தாண்டி சிங்கம் இருந்த பகுதிக்கு சென்று, சிங்கத்தின் முன்பு சிங்கத்தை அழைப்பது போல் சைகை செய்து கைகளை விரித்து நடனமாடிய 13 வினாடி காட்சி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.



இது விதிமுறைகளை மீறிய ஒரு அபாயகரமான செயல் என்று உயிரியல் பூங்கா நிர்வாகிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். சிங்கத்தின் முன்பு நடனமாடிய அந்தப் பெண் நல்லவேளையாக சிங்கம் கோபமடைந்து பாய்வதற்கு முன்பு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார் அதனால் அபாயகரமான சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவத்தை படம் பிடித்த இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளிக் காட்சியாக பதிவிட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து நியூயார்க் நகர போலீசார் நடத்திய விசாரணையில் சிங்கத்தின் முன்பு நடனமாடிய பெண் 32 வயதான நியூயார்க் நகரை சேர்ந்த மியா ஆட்ரி, என்பது தெரியவந்துள்ளது. உயிரியல் பூங்கா விதிமுறைகளை மீறி சிங்கத்தின் முன்பு சென்று நடனமாடிய  இந்தப் பெண்ணின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள் 
-------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 10 September 2019

ஆறு மணி நேரம் கணவனை கால் கடுக்க நிற்க வைத்த அன்பு மனைவி



விமான பயணத்தின் போது தன் மனைவியின் சுகமான தூக்கத்திற்காக 6 மணி நேரம் தொடர்ச்சியாக நின்றுகொண்டே பயணித்த கணவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோர்ட்னி லீ  ஜான்சன் என்பவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் அந்தப் பெண்ணின் கணவர் தன் மனைவியின் அருகே நின்று கொண்டிருக்கிறார் அருகில் அவரது மனைவி மூன்று இருக்கைகளிலும் சேர்த்து படுத்து சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார் தன் இருக்கையை மனைவிக்காக விட்டுக்கொடுத்து இந்த கணவர் விமான பயணத்தில் ஆறு மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்துள்ளார். இதுதான் காதல் என்று அந்த டிவீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படம் டிவிட்டரில் வைரல் ஆனதை தொடர்ந்து பலரும் அந்த கணவரை புகழ்ந்தும், கணவரை நிற்கவைத்து கொண்டு சுகமாக தூங்கிய மனைவியை ஒரு சிலர் திட்டியும் டிவீட் செய்துள்ளனர்.

இந்த ட்வீட்டை பார்த்தவர்களில் ஒருவர் இதுதான் உண்மையான காதல் என்று டிவீட் செய்துள்ளார், இன்னொருவர் இதற்குப் பெயர் காதலே இல்லை, இது அந்தப் பெண்ணின் சுயநலமே, அந்தப் பெண் தன் கணவனின் மடியிலோ அல்லது தோள்பட்டையிலோ தலை வைத்து படுத்து தூங்க கூடாதா? காதல் இருந்தால் இப்படி செய்திருக்க மாட்டார் என்று டுவிட் செய்துள்ளார். 


இன்னொரு பெண் "என்னுடையவர் பத்து நிமிடம் கூட இப்படி நிற்பதை நான்  அனுமதிக்க மாட்டேன், நிச்சயமாக அவர் மடியில் தலை வைத்து தூங்கியிருப்பேன், அது இன்னும் வசதியாக இருக்கும் அல்லது இருக்கையில் சரியாக அமர்ந்து ஓய்வெடுதிருப்பேன், உங்களுடயவரை இப்படியா ஆறு மணி நேரம் நிற்க வைப்பீர்கள்" என்று கேட்டு பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர் இது சுயநலம் என்று டைட்டானிக் படத்தில் இடம்பெறும் ஜாக் தன்னுயிரை கொடுத்து ரோஸ் நீரில் மூழ்காமல் காப்பற்றும் காட்சியை பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பெண் "என் கணவரும் இப்படிப்பட்ட அன்பு கொண்டவர் தான், அவரும் இப்படி தான் செய்வார், ஆனால் அவரிடம் இப்படி ஒன்றை கேட்கும் குணம் கொண்ட மனைவி அல்ல நான்" என்று பதிவிட்டுள்ளார்.
----------------------------------------------------------------------------------------- -------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 30 March 2018

பார்த்ததில் ரசித்தது


முரட்டு கிளியா இருக்கும் போலிருக்கு 

இதை பார்த்துட்டு நீங்க டிரை பண்ணாதீங்க 

கொரியாவில் பேஸ்பால் - இப்படியும் விளையாடலாம்  

செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தவங்க இல்ல 

இது என்ன புதுமாதிரியான விளையாட்டா இருக்குதே 

Chinna Chinnathevan

null
-------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 5 March 2018

குழந்தைகளை பொறுப்பாக பார்த்து கொள்ளும் தந்தைகள்


சிறு குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வளர்ப்பதில் பெற்ற தாயை மிஞ்ச முடியாது, தந்தையிடம்  சில மணி நேரம் குழந்தைகளை பார்த்து கொள்ள சொல்லி அவர்கள் கையில் ஒப்படைத்தால் என்ன நடக்கும்? இணையத்தில் வலம் வரும் சில வேடிக்கையான புகைப்படங்களின் தொகுப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் டிரெண்ட்ஸ் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டிரெண்ட்ஸ் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 




-------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 12 February 2018

சிகரெட் பிடிப்பதை நிறுத்த தலைகவசம் அணிந்த மனிதர்


புகைப்பழக்கம் உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை சிகரெட் பெட்டிகளிலேயே அச்சிட்டிருந்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு விளம்பரங்கள் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் வெளியிடப்பட்டாலும், புகைக்க பழகி விட்டவர்கள் அந்த பழக்கத்தை அவ்வளவு எளிதில் விட்டு விட முடிவதில்லை, அவர்களே அந்த பழக்கத்தை நிறுத்தி விட நினைத்தாலும் நிறுத்த முடியாத அளவுக்கு புகைப்பழக்கம் அவர்களை அடிமைபடுத்தி வைத்திருக்கிறது. 




துருக்கி நாட்டை சேர்ந்த 42 வயதாகும் இப்ராகிம் யூஸல் கடந்த 25 வருடங்களாக தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட் புகைப்பதை வழக்கமாக கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார், சமீபத்தில் அவரது தந்தை புகைபழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் வந்து இறந்து போனவுடன் இப்ராகிம் யூஸலுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கத்தை நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது, ஆனால் எவ்வளவோ முயற்சித்தும் புகைக்கும் பழக்கத்தில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை, ஒவ்வொரு வருடமும் தன் மூன்று பிள்ளைகளின் பிறந்த நாளில் சிகரெட் புகைப்பதை விட்டு விட உறுதிமொழி எடுப்பார் ஆனால் அடுத்த நாள் முடிவதற்குள் அந்த உறுதிமொழி காற்றில் புகையாகி மறைந்து விடும், இறுதியாக சிகரெட் புகைக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட இப்ராகிம் தேர்ந்தெடுத்த வழி தான் இந்த செம்பு கம்பிகளால் செய்யபட்ட தலைகவசம். 



பார்ப்பதற்கு டேபிள் ஃபேனின் விசிறிகளை மூடியிருக்கும் கவசத்தை போல் செம்பு கம்பிகளை இணைத்து மெல்லிய இடைவெளிகளுடன் காணப்படுகிறது அந்த தலைகவசம், காற்றை சுவாசிக்கவும், மெல்லிய ஸ்ட்ரா கொண்டு தண்ணீர் குடிக்கவும் முடியும், உணவு உண்ணும் வேளை வந்தால் மட்டும் அந்த கவசத்தின் சாவியை பொறுப்பாக வைத்திருக்கும் மனைவி வந்து கவசத்தை சாவி கொண்டு திறந்து விட வேண்டும். இப்ராகிம் யூஸல் புகைபழக்கத்தை நிறுத்த இந்த செம்பினால் செய்யப்பட்ட தலைகவசத்தை காலையில் எழுந்தவுடன் அணிந்து கொண்டு பூட்டி சாவியை மனைவியின் கையில் கொடுத்து விடுகிறார். சாப்பாட்டு நேரம் வந்தவுடன் அவரது மனைவி  இப்ராகிமின் தலைகவசத்தை திறந்து விட்டால் தான் இப்ராகிம் உணவருந்த முடியும். 


  
முதலில் இந்த வினோதமான திட்டத்தை இப்ராகிமின் மனைவி ஏற்க மிகவும் தயங்கி இருக்கிறார், ஆனால் கணவர் மிகவும் தீவிரமாக புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட தீர்மானித்து செயல்படுவதை பார்த்து அவர் தன் கணவருக்கு உதவ தொடங்கி விட்டார், இன்னும் சில நாட்களில் இப்ராகிம் புகைபழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு விடுவார் என்று நம்பலாம். 


-------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 22 January 2018

பஸ் டிக்கெட் கட்டண உயர்வு - பரிதாபங்கள்

மிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து கட்டண உயர்வை பொறுக்க முடியாமல்  சமூக ஊடகங்களில் பலர் தங்கள் வேதனையை மீம்ஸ்களாக வெளிப்படுத்தி உள்ளனர், அந்த மீம்ஸ்கள் பஸ் டிக்கெட் பரிதாபங்கள் என்ற தலைப்பில் காணொளி தொகுப்பாக உங்கள் பார்வைக்கு காணொளி காட்சி பிடித்திருந்தால் டிரெண்ட்ஸ்  டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டிரெண்ட்ஸ் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

-------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 10 January 2018

ஆனந்தம் தந்த அன்பளிப்பு - உல்டா செய்த முகநூல் குழு


குணசித்திர நடிகர் திரு எம் எஸ் பாஸ்கர் அவர்களின் மகள் அவருக்கு சர்ப்ரைஸ் அன்பளிப்பாக அவருக்கு பிடித்த பைக் ஒன்றை பரிசளித்து அவரை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய காணொளி காட்சி சமூக ஊடகங்களில் கடந்த வாரம் வைரல் ஆனது


அந்த காணொளி காட்சியை பார்த்த முகநூல் பக்க மீம்ஸ் போடும் குழு ஒன்று வழக்கம் போல் அந்த சர்ப்ரைஸ் அன்பளிப்பு காட்சியை தங்கள் சேட்டையை காண்பிக்கும் வகையில் உல்டா செய்து இன்னொரு காணொளி காட்சி தயாரித்து வெளியிட்டுள்ளனர்.., சமூகத்தில் தவறு செய்பவர்களை கண்டித்து, கலாய்த்து மீம்ஸ் போட்டிங்க, அது பரவாயில்ல ஆனால் தந்தை மகள் பாசத்தையும் கேலி செய்து காணொளி காட்சி போட வேண்டுமா?  என்னம்மா இப்படி பண்றீங்களேமா? 

Sulpikar Spider

மகளின் பாசத்தை கொச்சை படுத்திய பசங்க

-------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 2 January 2018

அட! மனிதர்களிடம் அன்பு, இரக்கம் - மனிதத்தன்மை இன்னும் இருக்கிறதே



ரோட்டில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருப்பவனை காப்பாற்றாமல் அடிபட்டவனோடு செல்பி எடுக்கும் மனித மிருகங்கள் நிறைந்த உலகில் வாழ்கிறோம். மனிதத்தன்மை மனிதர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டதோ  என்று எண்ணிய வேளையில் இந்த காணொளி காட்சி தொகுப்பு கண்ணில் பட்டது... மனிதத்தன்மை இன்னும் கொஞ்சம் மீதம் இருப்பது தெரிந்தது...  


Tuesday 26 December 2017

காதுகளில் பேசும் ஸ்மார்ட் மொழிபெயர்ப்பு கருவிகள்


காதுகளில் வைக்கும் சிறிய இயர் போன் போல் காட்சியளிக்கும் இந்த கருவியை உங்கள் காதுகளில் பொருத்தி கொள்ளலாம். இந்த கருவி உங்களிடம் பேசுபவர்கள் எந்த மொழியில் (பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், ஆங்கிலம்...) பேசினாலும் அதை உடனுக்குடன் உங்கள் தாய்மொழியில் மொழிபெயர்த்து உங்கள் காதுகளில் ஒலிக்க செய்கிறது பைலட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி கடந்த வருடம் வேவர்லி லாப்ஸ் என்ற நிறுவனத்தால் சந்தையில் அறிமுகபடுத்தப்பட்டிருக்கும் இந்த கருவியில் ஒரு ஆப் மூலம் நீங்கள் உங்களுக்கு மொழிபெயர்க்க வேண்டிய மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த கருவியின் விலை 129 டாலர்கள், நம் ஊர் பணமதிப்பில் எட்டாயிரம் முதல் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு கிடைக்கும்.  பைலட் - உலகின் முதல் ஸ்மார்ட் மொழிபெயர்ப்பு காது கருவியின் செயல்பாடு பற்றி மேலும் தெரிந்து கொள்ள காணொளி காட்சி பாருங்கள்:



இதே போன்று சந்தையில் மேலும் சில மொழிபெயப்பு கருவிகளும் கிடைக்கின்றன: 

இன்னொரு மொழிபெயப்பு கருவி இலி (ILI TRANSLATOR) 


இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகபடுத்தபட்ட கூகுள் நிறுவனத்தின் பிக்சல் பட்ஸ்

Saturday 16 December 2017

7டி தொழில்நுட்பத்தில் மிருக காட்சி சாலை

3டி, 4டி, 5டி தொழில்நுட்பம் பற்றி கேள்விபட்டிருப்போம், இப்போது அறிமுகமாகி உள்ள 7டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள மிருக காட்சி சாலை  நிஜமாகவே மிருகங்களை கண்ணுக்கு  முன் கொண்டு வருவது போல் உள்ளது, காணொளி காட்சியை பார்த்து விட்டு சொல்லுங்கள்


Thursday 14 December 2017

இந்த வருடத்தில் அதிகமாக தேடப்பட்ட விஷயங்கள்

ந்த வருடத்தில் அதிகமாக தேடப்பட்ட விஷயங்களை கூகுள் நிறுவனம் காணொளி தொகுப்பாக வெளியிட்டுள்ளது, காட்டுத்தீ எப்படி பரவுகிறது, வட கொரிய ஏவுகணைகள் எவ்வளவு தூரம் பறந்து சென்று தாக்கும் என்று துவங்கி வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களுக்கு எப்படி உதவுவது என்பது வரை உலக மக்கள் சமூக அக்கறையோடு பல விஷயங்களை தேடி உள்ளார்கள், காணொளி காட்சி தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.