வியட்நாம் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஹை பூங் சர்வதேச மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ குழுவுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
கருத்தடை சாதனம் செயலிழந்ததால் கருத்தரித்த அந்த பெண்ணுக்கு வெற்றிகரமான பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை பிறக்கும் போதே பிரசவம் பார்த்த மருத்துவரையும், பணியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த குழந்தை தாயின் செயலிழந்த கருத்தடை சுருளை கையில் பிடித்து கொண்டே தடைகளை உடைத்து பிறந்துள்ளது தான் வியப்பின் உச்சம். அந்த குழந்தையை பெற்ற தாயின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை பார்த்த மருத்துவர் ட்ரான் வியட் பூங் அந்த குழந்தையை புகைப்படமெடுத்து இணையத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
"பிரசவம் முடிந்த பின்பு, அந்த குழந்தை கருத்தடை சாதன சுருளை கைகளில் இறுக்கமாக பற்றி கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது, அதனால் அதை புகைப்படம் எடுத்து வைத்து கொண்டேன். அந்த புகைப்படம் இணையத்தில் இவ்வளவு கவனத்தை பெற்று பிரபலமாகும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை" என்று அந்த மருத்துவர் கூறியுள்ளார்.
முந்தைய பதிவுகள்
-------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------